தற்போது www.flippar.in என்ற பிரத்யேக இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது..!!!


காளான் பிரியாணி

தேவையான பொருட்கள்

பச்சரிசி / பாசுமதி அரிசி - 1/4 கிலோ
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 3
காளான் - 200 கிராம்
புதினா - 1 கட்டு (சிறியது)
பச்சை மிளகாய் - 5
உப்பு - தேவையான அளவு

அரைக்க தேவையானவை

இஞ்சி - 2 இஞ்ச் அளவு
பூண்டு - 12 பல்லு
முந்திரி - 3
பாதாம் - 2
பிஸ்தா - 2

தாளிக்க தேவையானவை

நெய் - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
பட்டை - 6
கிராம்பு - 6
ஏலக்காய் - 4 (தட்டிக் கொள்ளவும்)
சோம்பு பொடி - 1 தேக்கரண்டி
அன்னாசி பூ - 2 இதழ்
மராட்டி மொக்கு - 3
பிரியாணி இலை - 1
கரம் மசாலா தூள் (மல்லித் தூள்) - 1/2 தேக்கரண்டி
பிரியாணி மசாலா - 1/2 தேக்கரண்டி
கொத்தமல்லித்தழை - 1 கைப்பிடி

செய்முறை

1. அரிசியை 1/2 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து, பின்னர் நீரை வடிகட்டி கழுவி வைக்கவும்.

2. புதினாவை சுத்தம் செய்து நறுக்கி வைத்துக் கொள்ளவும்

3. வெங்காயத்தை நீள வாக்கிலும், தக்காளியை பொடியாகவும் நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை நடுவில் கீறிக் கொள்ளவும்.

4. காளானை அரிந்து இரண்டு முறை நன்றாகக் கழுவி வெதுவெதுப்பான நீரில் போட்டு எடுத்து வைத்துக் கொள்ளவும்.

5. குக்கரில் 2 தேக்கரண்டி நெய், 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசி பூ, மராட்டி மொக்கு, பிரியாணி இலை போட்டு தாளிக்கவும்.

6. அனைந்து பொரிந்ததும், அரைக்க கூறப்பட்ட பொருள்களை அரைத்து, இதனுடன் சேர்த்து சிவக்க வதக்கவும். பிறகு சோம்பு சேர்த்து வதக்கவும்.

7. அதனுடன் நறுக்கிய பெரிய வெங்காயம், புதினா தழை சேர்த்து வதக்கவும்.

8. அடுத்து பச்சைமிளகாய், தக்காளியைப் போட்டு நன்றாக வதக்கவும்.

9. பின்பு நறுக்கிய காளானை சேர்த்து வதக்கவும். அதனுடன் மஞ்சள்தூள், பிரியாணி மசாலா, கரம் மசாலா சேர்த்து வதக்கவும்.

10. அடுத்து ஊறவைத்து வடிக்கட்டிய அரிசியை போட்டு (பாசுமதி அரிசி 1 பங்கு : தண்ணீர் 2 பங்கு)(பச்சரிசி 1 பங்கு : தண்ணீர் 2 1/2 பங்கு) லேசாக கிளறி, சுடுதண்ணீர் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறிய பின் குக்கரை மூடி 2 விசில் வரும் வரை வேக வைத்து அடுப்பிலிருந்து இறக்கவும்.

11. குக்கர் ஆவி அடங்கியது, கொத்தமல்லித்தழை சேர்த்து லேசாக கிளறி பரிமாறவும்.

குறிப்பு

1. தேவைப்பட்டால் குக்கரை மூடி வேகவைப்பதற்கு முன், அரை எலுமிச்சம்பழத்தை சாறு பிழிந்து சேர்த்து வேகவைக்கவும்.

Labels:

1 Comments:

At June 26, 2011 at 8:49 AM , Blogger Murugeswari Rajavel said...

பிரியாணிக்கான செய்முறை தெளிவாக விளக்கப்பட்டிருக்கிறது.மேலும் பல செய்முறைகளையும் அழகாய்ப் படத்துடன் வெளியிட்டிருப்பது சிறப்பு.

 

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment

வருகைக்கு நன்றி!!.. தங்களின் மேலதிக விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன.

Subscribe to Post Comments [Atom]

HOME  |  NEWS  |  COMPUTER  |  HEALTH  |  CUISINE  |  PHILOSOPHY  |  STORY  |  AGRI


!! மனிதன் - எதை நோக்கி !!

↑ Grab this Headline Animator